Duration 1:54

தேங்காய் சாதம் | தேங்காய் சோறு | Coconut Rice | பிரதான உணவு | சைவம் | AmbiliMama CookBook

23 watched
0
0
Published 11 Apr 2020

இந்த செய்முறை ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளிலும் கிடைக்கிறது. English (RECIPES IN ENGLISH): /playlist/PLrQbiDmjIzpicqhNaj4cIyvTUWfuk2aMV Malayalam (പാചക കുറിപ്പുകൾ): /playlist/PLrQbiDmjIzpj1IkmAhEPZEDuH2MyhwvWB Tamil (சமையல் செய்முறைகள்): /playlist/PLrQbiDmjIzpgMVqqhrbSlv5kWPfemGkTZ இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காம எங்க சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) பண்ணுங்க மற்றும் நோட்டிபிகேஷன் (NOTIFICATION) பெல் ஐகானை கிளிக் பண்ணி நாங்க புதுசா அப்லோட் பண்ற ரெசிபிய உடனே தெரிஞ்சுக்கோங்க. தேங்காய் சாதம் உணவு வகை: பிரதான உணவு இடம்: தமிழ்நாடு தேங்காய் சாதம் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் – 1 கோப்பை சோறு - 4 கோப்பை தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி இஞ்சி - 1 அங்குலம் பச்சை மிளகாய் - 5 வரமிளகாய் - 3 உப்பு - 1 மேசைக்கரண்டி குறிப்பு 1 தேக்கரண்டி = 5 மில்லி 1 மேசைக்கரண்டி = 15 மில்லி 1 கோப்பை = 250 மில்லி தயாரிப்பு முறை: 1. அகன்ற வாணலியில் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயை குறைந்த தீயில் சூடாக்கி அதில் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளிக்கவும். 2. இதனுடன் 2 மேசைக்கரண்டி கடலைப்பருப்பு, 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு, 1 அங்குலம் அளவு பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 3. இதனுடன் 5 நீளவாக்கில் பிளந்த பச்சை மிளகாய், 3 வரமிளகாய், 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். 4. இதனுடன் 1 கோப்பை துருவிய தேங்காய் சேர்த்து 3 நிமிடங்கள் வறுக்கவும். 5. இதனுடன் 4 கோப்பை சோறு சேர்த்து நன்றாக கலந்து விட்டு தீயை அணைக்கவும். 6. சுவையான தேங்காய் சாதம் தயார். #தேங்காய்சாதம் #தேங்காய்சோறு #RecipesInTamil #CoconutRice #Ambilimama #AmbiliMamaCookBook

Category

Show more

Comments - 0